ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டப்பூர்வமாக தனியார் டியூஷன் அல்லது சிறப்பு வகுப்புகள் எடுக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான பிரத்யேக ‘தனியார் ஆசிரியர் பணி அனுமதிச் சீட்டை’ (Private Teacher Work Permit) மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MoHRE) மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து வழங்குகின்றன. இந்த அனுமதிச் சீட்டு முற்றிலும் இலவசமானது. இதன் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பிக்க
https://www.mohre.gov.ae/en/services/private-tutor-licensing

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
கீழ்க்கண்ட பிரிவினர் இந்த அனுமதிச் சீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அரசு அறிவித்துள்ளது:
- பள்ளி ஆசிரியர்கள்: அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்.
- பணிபுரியும் ஊழியர்கள்: அரசு மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்கள்.
- மாணவர்கள்: பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்.
- வேலையில்லாதவர்கள்: குடும்பப் பொறுப்பாளர்கள் அல்லது கணவர்/மனைவி ஸ்பான்சர்ஷிப்பில் உள்ளவர்கள்.
தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்களின் நிலையைப் பொறுத்து பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
- பொதுவானவை: எமிரேட்ஸ் ஐடி (Emirates ID), செல்லுபடியாகும் விசா, நடத்தை சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ்.
- ஊழியர்கள்/ஆசிரியர்கள்: தற்போதைய முதலாளி அல்லது பள்ளியிடமிருந்து பெறப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC).
- மாணவர்கள்: கல்வித் தொடர்ச்சி சான்றிதழ் (Continuity Certificate) மற்றும் பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதி.
விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்
- இணையதளம்: MoHRE அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதன் ஸ்மார்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிரிவு: ‘Services’ பகுதிக்குச் சென்று ‘Private Teacher Work Permit’ என்பதைத் தேர்வு செய்யவும்.
- உள்நுழைவு: UAE Pass மற்றும் எமிரேட்ஸ் ஐடி மூலம் உங்கள் கணக்கை உள்நுழையவும்.
- பதிவேற்றம்: சுயவிவரங்களை நிரப்பி, நடத்தை விதிமுறைகளை (Code of Conduct) பதிவிறக்கி கையொப்பமிட்டு, ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
முக்கிய விதிமுறைகள் மற்றும் அபராதங்கள்
- பரிசீலனை காலம்: விண்ணப்பம் சமர்ப்பித்த 1 முதல் 5 வேலை நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
- கட்டுப்பாடு: ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனியார் பாடம் எடுக்கக் கூடாது.
- அபராதம்: இந்த முறையான அனுமதிச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக கியூஷன் எடுத்தால், 50,000 திர்ஹம் வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி, அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்களின் கல்விப் பணியைச் சட்டப்பூர்வமாகத் தொடரலாம்.