அமெரிக்கர்களின் நிதி நிலைமையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை- டிரம்ப்

அமெரிக்கர்களின் நிதி நிலைமையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை- டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய கருத்து, தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. அமெரிக்க மக்களின் பொருளாதாரச் சூழல் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை கருத்து: செய்தியாளர் சந்திப்பின் போது, சாதாரண அமெரிக்கக் குடிமக்களின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் வாழ்வாதாரச் சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப்,

“அமெரிக்கர்களின் நிதி நிலைமையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை,”

என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: அதிபரின் இந்த ‘வெளிப்படையான’ பேச்சு, பொறுப்பற்ற தனமானது என எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர். ஒரு நாட்டின் தலைவராக இருந்து கொண்டு, மக்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றி கவலை இல்லை என்று கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அவர் எப்போதும் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் என்றும், அவரது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.