அதிநவீன அமெரிக்க MQ-9 டிரோன்களை வீழ்த்திய ஈரான்: வான்பரப்பில் அதிரடி!: உடைந்த பாகங்களின் காட்சிகள் வெளியீடு!

அதிநவீன அமெரிக்க MQ-9 டிரோன்களை வீழ்த்திய ஈரான்: வான்பரப்பில் அதிரடி!: உடைந்த பாகங்களின் காட்சிகள் வெளியீடு!

தெற்கு ஈரான்: கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் வான் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான பல அதீத நவீன ஆளில்லா விமானங்களை (Drones) ஈரானிய பாதுகாப்புப் படை வான்பரப்பிலேயே சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரான் வெளியிட்ட காணொளியில், அமெரிக்காவின் MQ-9 Reaper மற்றும் இஸ்ரேலின் Hermes 900 ஆகிய டிரோன்கள் தகர்க்கப்பட்டதும், அதன் சிதைந்த பாகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், சுமார் 260 கோடி ரூபாய் (32 மில்லியன் டாலர்) மதிப்புள்ள MQ-9 டிரோன், ‘டொமாஹாக்’ (Tomahawk) -ஏவுகணைகளை ஏந்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

டிரோன்களின் உடைந்த பாகங்கள் தற்போது பொதுவெளியில் காட்டப்பட்டுள்ளன. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க டிரோனில் டொமாஹாக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.