புனித சனிக்கிழமை: எருசலேமில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்; தேவாலயத்திற்குச் செல்ல தடை!

எருசலேம்: புனித ஈஸ்டர் வாரத்தின் முக்கிய நிகழ்வான ‘புனித தீ’ (Holy Fire) சடங்கு இன்று எருசலேமில் நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் புனித கல்லறை தேவாலயத்திற்கு (Church of the Holy Sepulchre) செல்வதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நடந்தது என்ன?

  1. கட்டுப்பாடுகள்: எருசலேமின் பழைய நகர் பகுதி முழுவதையும் ராணுவக் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து வழிபாட்டாளர்களைத் தடுத்துள்ளது.
  2. தாக்குதல்: தேவாலயத்திற்குச் செல்ல முயன்ற இளைஞர்கள் மற்றும் சாரண அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இஸ்ரேலியப் போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் சீருடையில் இருந்த பாலஸ்தீனக் கொடிகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர்.
  3. தடை: பாதுகாப்பு காரணங்களைக் கூறி, கடந்த 40 நாட்களாக இந்தத் தேவாலயம் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று வழிபாட்டிற்கு அனுமதி கோரிய லத்தீன் பேராயர் உள்ளிட்ட உயர்மட்ட மதத் தலைவர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வழிபாட்டு சுதந்திரத்திற்கு எதிரானது என லெபனான் மற்றும் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.