நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட போர்: அமெரிக்க போர்க்கப்பலுக்கு ஈரான் விடுத்த ’30 நிமிட’ எச்சரிக்கை!

நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட போர்: அமெரிக்க போர்க்கப்பலுக்கு ஈரான் விடுத்த ’30 நிமிட’ எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் / ஹார்முஸ் நீரிணை: ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்த அமெரிக்க கடற்படையின் அழிப்புக் கப்பல் (Destroyer) மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் விடுத்த 30 நிமிட எச்சரிக்கையால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது.

நடந்தது என்ன? ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) வெளியிட்டுள்ள தகவலின்படி, சர்வதேச கடல் எல்லையை மீறி அமெரிக்க போர்க்கப்பல் முன்னேறியதாக ஈரான் குற்றம் சாட்டியது. “அடுத்த 30 நிமிடங்களில் கப்பல் பின்வாங்கவில்லை என்றால், அது ஏவுகணைகளால் தகர்க்கப்படும்” என ஈரான் எச்சரித்தது.

பாகிஸ்தானின் சாதுரியம்: இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாகிஸ்தான் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டனர். அமெரிக்க தூதுக்குழுவிடம் இந்தச் செய்தி பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் போர்க்கப்பல் தனது பயணத்தை நிறுத்தி பின்வாங்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் சிறிது நேரம் முட்டுக்கட்டை ஏற்பட்டது.