நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் மற்றும் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தொகுப்பை தேசிய குற்ற ஆவண காப்பகம் தயாரித்து பராமரித்து வருகிறது. இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பட்டியல் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், போக்சோ குற்றங்கள் மற்றும் ஈவ் டீசிங் போன்ற பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபடுவோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
இதில், இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் குற்றவாளிகளின் பெயர்கள் இதுவரை இடம்பெற்று இருப்பதாக ஒரு மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.
பதிவேட்டில், குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாளங்கள், கைவிரல் ரேகை அனைத்தும் இடம்பெற்று இருக்கும் எனவும், இவை தனிநபர் பார்வைக்கு வழங்கப்படாது. பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவும் என்பதால் அவர்களுக்கு மட்டுமே அவை குறித்த விவரங்கள் வழங்கப்படும் எனவும் கூறினர்.
2015 ஆம் ஆண்டில் 34,651 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 2016 ஆம் ஆண்டில் 4296 கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து 38,947 ஆக பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 3,29,243 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2016 இல் 3,38,954 ஆக உயர்ந்துள்ளன.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய அறிக்கைகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்னும் வெளியிடப்படவில்லை.
2016 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்ற வழக்குகளில் கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக (32.6 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பெண்கள் மீது தாக்குதல் (25 சதவீதம்), கடத்தல் மற்றும் பெண் கடத்தல் (19) சதவீதம்), கற்பழிப்பு (11.5 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2016 இல் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 4,882 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4,816, மகாராஷ்டிராவில் 4,189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோதியின் பாஜக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பாலியல் வல்லுறவானது இந்தியாவை முடக்கக்கூடிய சமூக நெருக்கடி என்பதை உணர்ந்து அதனை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை.
ஆசிபுவை வன்புணர்வு செய்த குற்றவாளிகளாகட்டும் ,
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆகட்டும் ..
கத்துவா கேஸ் ஆகட்டும் …
இவர்களுக்கும் தண்டனை , மரணதண்டனை என்று அறிவித்தால் தான் பாலியல் குற்றங்கள் குறையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
Database வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு , இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு , ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு , இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கினாலொழிய , பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை முடியாது .
Long time supporter, and thought I’d drop a comment.
Your wordpress site is very sleek – hope you don’t mind me
asking what theme you’re using? (and don’t mind if I steal it?
:P)
I just launched my site –also built in wordpress
like yours– but the theme slows (!) the site down quite a bit.
In case you have a minute, you can find it by searching for “royal cbd”
on Google (would appreciate any feedback) – it’s
still in the works.
Keep up the good work– and hope you all take care of yourself during the coronavirus scare!
~Alex
Hi bro thanks for dropping
Just FYi
I Use Go theme ,Version: 1.2.4