வாஷிங்டன் (ஏப்ரல் 3, 2026): ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் (US Army) உயர்மட்டத் தளபதிகளைப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

மறுசீரமைப்பா? அல்லது மௌனமாக்கப்படுவதா? பென்டகன் பணிநீக்கங்களின் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்!
வாஷிங்டன் (ஏப்ரல் 3, 2026): அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் பணிநீக்கங்கள், ராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாகத் தங்களது போர்க்காலக் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை அப்புறப்படுத்துவதற்காகவே என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள் ஒடுக்குமுறை:
பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி, நீக்கப்பட்ட பல ஜெனரல்கள் “மனிதாபிமானமற்ற” தாக்குதல் முறைகளை எதிர்த்தவர்கள்.
- லாமர்ட் மற்றும் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் தாக்குதல்: மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மீது ‘PrSM’ ஏவுகணைகளை ஏவுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது “போர்க்குற்றம்” என்றும் எச்சரித்த அதிகாரிகளே ஹெக்செத்தின் முதன்மை இலக்காக மாறியுள்ளனர்.
- நீதிக்கு இடமில்லை: “ராணுவ வீரர்களுக்கு நீதி தேவையில்லை, அவர்கள் உத்தரவுகளை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்” என்ற ஹெக்செத்தின் தற்போதைய நிலைப்பாடு, நியாயமாகப் பேசுபவர்களை ராணுவத்தை விட்டு வெளியேற்றி வருகிறது.
2. ‘America First’ – ‘Israel First’ விசுவாச சோதனை:
தற்போது அமெரிக்க ராணுவத்தில் ஒரு புதிய விதியைப் புகுத்த டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது.
- நிபந்தனையற்ற ஆதரவு: இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கோ அல்லது அமெரிக்காவின் தன்னிச்சையான போர் முடிவுகளுக்கோ சிறிய அளவில் கூடத் தயக்கம் காட்டும் அதிகாரிகள் “விசுவாசமற்றவர்கள்” என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
- அக்மார்க் விசுவாசிகள் மட்டுமே: நீக்கப்பட்ட ஜெனரல் ராண்டி ஜார்ஜ் போன்றவர்கள், போரின் விளைவுகள் மற்றும் பிராந்திய நாடுகளுடனான உறவு குறித்துக் கவலை தெரிவித்தனர். ஆனால், ஹெக்செத்திற்குத் தேவைப்படுவது கேள்விகளே கேட்காத, “Yes Men” என்று அழைக்கப்படும் அதிகாரிகளே.
3. தகுதியை மீறிய தன்னிச்சையான முடிவு:
- எதிர்ப்பு தெரிவித்த தரைப்படைச் செயலாளர்: தரைப்படைச் செயலாளர் டான் டிரிஸ்கால் (Dan Driscoll), இந்த அதிகாரிகள் பல தசாப்தங்களாகச் சிறப்பான சேவையாற்றியவர்கள் எனக் கூறி அவர்களின் பெயர்களை நீக்க மறுத்தார். ஆனால், ஹெக்செத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அந்த நான்கு பெயர்களையும் நீக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சட்ட ரீதியான கேள்வி: ராணுவ விதிகளின்படி, பாதுகாப்பு அமைச்சர் ஒரு பதவி உயர்வுப் பட்டியலை முழுமையாக ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பெயர்களை மட்டும் “வெட்டி எடுப்பது” (Striking names) சட்டப்படி செல்லுமா என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.
4. குறிவைக்கப்படும் பின்னணி:
- ஆராய்ச்சிப் பேப்பரும் காரணமா? நீக்கப்பட்ட கறுப்பின அதிகாரிகளில் ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஏன் கறுப்பின அதிகாரிகள் போர்முனைப் பணிகளை விட உதவிப் பணிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?” என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இதற்காகவே அவர் இப்போது பழிவாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
- பழைய கணக்குகள்: ஆப்கானிஸ்தான் வெளியேற்றத்தின் போது பணியாற்றிய பெண் அதிகாரிகளும் ஹெக்செத்தின் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
5. ‘Woke’ கலாச்சாரத்திற்கு எதிரான போர்:
ஹெக்செத் தனது புத்தகமான “The War on Warriors”-இல் குறிப்பிட்டது போல, ராணுவத்தில் பன்முகத்தன்மை (Diversity) என்ற பெயரில் தகுதியற்றவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக அவர் கருதுகிறார்.
- தொடரும் பணிநீக்கங்கள்: ஏற்கனவே கடற்படைத் தளபதி லிசா ஃபிரான்செட்டி (முதல் பெண் கடற்படைத் தலைவர்) மற்றும் கூட்டுப் படைத் தளபதி சி.க்யூ. பிரவுன் (கறுப்பின அதிகாரி) ஆகியோரை டிரம்ப் நிர்வாகம் காரணம் ஏதுமின்றிப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதழியல் பார்வை:
“மெரிட் (Merit) அல்லது தகுதி என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை அல்லது பெண்களை மட்டும் குறிவைப்பது அமெரிக்க ராணுவத்தின் ஒற்றுமையைச் சிதைக்கும் செயலாகும். 43% கறுப்பின மற்றும் சிறுபான்மையின வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தில், அதன் தலைமை மட்டும் ‘வெள்ளையின ஆண்களாக’ இருக்க வேண்டும் என்று ஹெக்செத் நினைப்பது, எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ அல்ல, ‘பாகுபாடு ஃபர்ஸ்ட்’ என்றே பார்க்கப்படுகிறது.”
