இஸ்லாமாபாத் / மீனாப்: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மாபெரும் உணர்ச்சிப் போராட்டத்தை ஈரான் முன்னெடுத்துள்ளது. மீனாப் (Minab) நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்களின் அந்தப் பிஞ்சு குழந்தைகளின் இரத்தக் கறை படிந்த பள்ளிப் பைகள் (School Packs) மற்றும் காலணிகளை (Shoes) ஈரான் சபாநாயகர் காலிபாஃப் தன்னுடனேயே விமானத்தில் இஸ்லாமாபாத் கொண்டு வந்துள்ளார்.

பேசும் சாட்சிகள்
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடனான பேச்சுவார்த்தை மேசையில், இந்த இரத்தக் கறை படிந்த பைகளைச் சாட்சியாக வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
- இரத்தக் கறை படிந்த புத்தகங்கள்: தாக்குதலில் சிதறிய குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த சிறிய காலணிகள் அனைத்தும் விமானத்தில் சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன .
- காலிபாஃபின் மெசேஜ்: “அமெரிக்க ஆயுதங்கள் எப்படி எமது குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் சிதைத்தன என்பதற்கான ஆதாரங்களைச் சுமந்து வந்துள்ளோம்” என்று காலிபாஃப் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் எதிரொலிக்குமா?
இன்று காலை இஸ்லாமாபாத் வந்தடைந்த அமெரிக்கத் தூதுக்குழுவிற்கு இது ஒரு மிகப்பெரிய தார்மீக அழுத்தத்தை (Moral Pressure) ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவின் தர்மசங்கடம்: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் பிஞ்சு குழந்தைகளின் இரத்தம் படிந்த உடமைகள் – இவை இரண்டுக்கும் மத்தியில் ஜே.டி. வான்ஸ் தனது வாதங்களை முன்வைப்பது சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது.
- நிபந்தனையில் உறுதி: “இந்தப் பைகளில் படிந்துள்ள இரத்தத்திற்கு நியாயம் கிடைக்காமல், எவ்வித சமரசமும் இல்லை” என ஈரான் தூதுக்குழுவினர் தற்போதே முழக்கமிடத் தொடங்கியுள்ளனர்.
இந்த இரத்தக் கறை படிந்த உடமைகள், வெறும் பொருட்களாகப் பார்க்கப்படாமல், ஈரானின் 10 அம்ச ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்பதற்கான ஒரு வலுவான ஆயுதமாகவே இப்போதைய சூழலில் உருவெடுத்துள்ளன.
