லெபனானை தாக்கிய இஸ்ரேல் -இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: அமெரிக்காவுக்கு ஈரான் கிடுக்கிப்பிடி!

 லெபனானை தாக்கிய இஸ்ரேல் -இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: அமெரிக்காவுக்கு ஈரான் கிடுக்கிப்பிடி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்கவிருந்த அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை, தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு ஆகிய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றத் தவறினால், பேச்சுவார்த்தையை முற்றிலுமாகப் புறக்கணிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

நிபந்தனைகளும் பின்னணியும்: ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Bagher Ghalibaf), “ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த அமெரிக்கா தவறிவிட்டது” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

  1. லெபனான் போர் நிறுத்தம்: ஈரான் முன்வைத்த 10 அம்ச அமைதித் திட்டத்தில் லெபனான் மிக முக்கியமானது. ஆனால், அமெரிக்கா இதனை மறுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
  2. முடக்கப்பட்ட நிதி: சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் $120 பில்லியன் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது ஈரானின் பிடிவாதமான கோரிக்கையாக உள்ளது.
  3. லெபனானில் போர் நிறுத்தம் என்பது ஒரு கோரிக்கை அல்ல; அது இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கான அடிப்படை நிபந்தனை” என்று ஈரானிய தூதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்கத் தூதுக்குழுவைச் சந்திக்காமல் பாதியிலேயே வெளியேறப் போவதாக ஈரான் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எச்சரித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் இந்த கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்காமல் ஈரான் வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.