ஈரானின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது

ஈரானின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

“இந்த இரண்டு விவகாரங்களும் தீர்க்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கும். இல்லையெனில், இந்த முயற்சி தோல்வியில் முடியும்,” என காலிபாஃப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு

அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழு நாளை அதிகாலை பாகிஸ்தான் வந்தடைகிறது. எனினும், “தற்போதைய போர்நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும், லெபனானுக்கு அல்ல” என்று வாஷிங்டன் ஏற்கனவே கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரானிய தூதுக்குழு வந்த விமானத்திற்குப் பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் வான்வழிப் பாதுகாப்பு (Aerial Escort) அளித்து அழைத்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, அண்டை நாடுகளுடன் சகோதரத்துவத்துடன் பழகத் தயார் என்று கூறியுள்ள நிலையில், இந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கின் போரை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்பது நாளை தெரியவரும்.