நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் , முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.
”கடைசியாக 7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டனர். இன்று தான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கூறினார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.உடல் கூராய்வு பகல் 12.30 மணி அளவில் முடிவடையும் என்று தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
17 வயது சிறுவன் என்று விடுவிக்க பட்ட அந்த கொடூரனுக்கும் தூக்கு கிடைத்து இருக்க வேண்டாமா ?
கற்பழிக்க தெரிந்தவன் எப்படி சிறுவன் ஆவான் ?,
அவனை சிறுவன் என்று என்று விட்டு விட முடியம் , என்பதே மக்களின் கோவமும் கொந்தளிப்பும் .
அங்கு ஜெயிலுக்கு வெளிவியில் கூடியிருந்த மக்களின் ஆதங்கம் சரியே .
இதனை போல இந்தியாவில் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளுக்கு இந்த கேஸ் ஒரு முன் மாதிரி
ஆசிபுவை வன்புணர்வு செய்து குற்றவாளிகளாகட்டும் ,
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆகட்டும் ..
கத்துவா கேஸ் ஆகட்டும் …
இவர்களுக்கும் தண்டனை , மரணதண்டனை என்று அறிவித்தால் தான் பாலியல் குற்றங்கள் குறையும் என்பதில் மாற்று கருத்து இல்லை .