கோவிட் -19: தமிழக  அரசு செயல்பாடு  மற்றும் புள்ளிவிவரங்கள்   

கொரோனா தடுப்பு நடவைக்கைக்கென்று , தமிழ் நாடு அரசாங்கம் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக , தனி இணையத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது .
கோவிட் -19 பற்றிய தகவல்களை https://stopcoronatn.in/ போர்டல் வழங்குகிறது;

   

தமிழக அரசின் அதிகாரபூர்வ அப்டேட் 

கோவிட் -19  சம்பந்தமாக  
யாரை தொடர்பு கொள்ள வேண்டும்;
தினசரி புல்லட்டின்;
சுகாதார ஆலோசனை;
முக்கியமான தகவல்’ மற்றும்
மீடியா கேலரி.
கோவிட் -19 இன் அறிகுறிகள் யாராவது இருந்தால்,
சுய-அறிக்கையிடலுக்கான இணைப்பு உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சரின் ட்வீட் 

&
தமிழக தேசிய நல குழுமம் டிவிட்டர்

Indian Currency value

Indian Exchange rates

News from Central Bank Of India

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் இருப்பை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:30க்கு துவங்கி மதியம், 1:45 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்றைய தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு  ஒரு முன்மாதிரி தீர்ப்பாகுமா ?

நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் மற்றும் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தொகுப்பை தேசிய குற்ற ஆவண காப்பகம் தயாரித்து பராமரித்து வருகிறது. இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பட்டியல் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், போக்சோ குற்றங்கள் மற்றும் ஈவ் டீசிங் போன்ற பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபடுவோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. 

இதில், இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் குற்றவாளிகளின் பெயர்கள் இதுவரை இடம்பெற்று இருப்பதாக ஒரு மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். 

பதிவேட்டில், குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாளங்கள், கைவிரல் ரேகை அனைத்தும் இடம்பெற்று இருக்கும் எனவும், இவை தனிநபர் பார்வைக்கு வழங்கப்படாது. பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவும் என்பதால் அவர்களுக்கு மட்டுமே அவை குறித்த விவரங்கள் வழங்கப்படும் எனவும் கூறினர்.

2015 ஆம் ஆண்டில் 34,651 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 2016 ஆம் ஆண்டில் 4296 கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து 38,947 ஆக பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 3,29,243 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2016 இல் 3,38,954 ஆக உயர்ந்துள்ளன.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய அறிக்கைகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்னும் வெளியிடப்படவில்லை.

2016 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்ற வழக்குகளில் கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக (32.6 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பெண்கள் மீது தாக்குதல் (25 சதவீதம்), கடத்தல் மற்றும் பெண் கடத்தல் (19) சதவீதம்), கற்பழிப்பு (11.5 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016 இல் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 4,882 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4,816, மகாராஷ்டிராவில் 4,189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோதியின் பாஜக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பாலியல் வல்லுறவானது இந்தியாவை முடக்கக்கூடிய சமூக நெருக்கடி என்பதை உணர்ந்து அதனை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை.

ஆசிபுவை வன்புணர்வு செய்த  குற்றவாளிகளாகட்டும் ,  
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்  ஆகட்டும் ..
கத்துவா கேஸ் ஆகட்டும் …

இவர்களுக்கும் தண்டனை , மரணதண்டனை என்று அறிவித்தால் தான் பாலியல் குற்றங்கள் குறையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Database வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு , இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு , ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு , இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கினாலொழிய ,  பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை முடியாது .

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி 

நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று  தூக்கு தண்டனை நிறைவேற்றல்  வரவேற்க தக்கது ,எனினும்  அந்த ஒருநபர் 17 வயது  என்று சொல்லி  விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே 

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில்  கற்பழிக்கப்பட்டு   கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் , முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 

அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.  

 ”கடைசியாக  7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டனர். இன்று தான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கூறினார்.  

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.உடல் கூராய்வு பகல் 12.30 மணி அளவில் முடிவடையும் என்று தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

17 வயது சிறுவன் என்று விடுவிக்க பட்ட அந்த கொடூரனுக்கும் தூக்கு கிடைத்து இருக்க  வேண்டாமா ?

கற்பழிக்க தெரிந்தவன் எப்படி சிறுவன் ஆவான் ?,
அவனை சிறுவன் என்று  என்று விட்டு விட முடியம் , என்பதே மக்களின் கோவமும் கொந்தளிப்பும் .

அங்கு ஜெயிலுக்கு வெளிவியில் கூடியிருந்த மக்களின் ஆதங்கம் சரியே .

  இதனை போல இந்தியாவில் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளுக்கு இந்த கேஸ்  ஒரு முன் மாதிரி 

ஆசிபுவை வன்புணர்வு செய்து குற்றவாளிகளாகட்டும் ,  
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்  ஆகட்டும் ..
கத்துவா கேஸ் ஆகட்டும் …

இவர்களுக்கும் தண்டனை , மரணதண்டனை என்று அறிவித்தால் தான் பாலியல் குற்றங்கள் குறையும் என்பதில் மாற்று கருத்து இல்லை .
 

இந்தியாவின் தற்போதய நிலவரம் 

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

கொரோன , இந்தியாவின் தற்போதய நிலவரம் 

கீழே இருக்கும் அனைத்தும் interactive  என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
  உங்கள் mouse கர்சர் வைத்து, மேலும்  விவரம் அறிந்துகொள்ளலாம் .

கொடுக்கப்பட்ட தகவல் இந்த நிமிடம் வரை புதுப்பிக்கப்பட்டது
கொடுக்கப்பட்ட்ட தகவல் அனைத்தும் ஆதார்வபூர்வ  தகவல்கள் மட்டுமே 

FIRST CASE REPORTED : JAN 29, 2020

?
மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை …
நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி பாஜக எம்.பிக்கள் வரை கூறிய பொய்கள், தவறான தகவல்களின் தொகுப்பு !
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் …

COVID-19

Corona Updates

Share this page

Sources :
1. https://www.mohfw.gov.in/

கிருமிநாசினியை பயன்படுத்தும் முறை – தமிழக சுகாதாரத்துறை 

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில், பஸ், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் இடங்களான இருக்கைகள், மேஜைகள், கதவுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில், பஸ், கதவுகளின் கைப்பிடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தியேட்டரின் உட்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ், ரெயில்களில் ஒரு வழித்தட பயணம் முடிவடைந்ததும் இருக்கைகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் தரை தளங்களில் அவ்வப்போது கிருமி நாசினியை தெளித்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவ்வப்போது கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பஸ், ரெயில் மற்றும் வாகனங்களில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 19 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 9 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.

எந்திர தெளிப்பான் போன்ற பல்வேறு வகையான தெளிப்பான்களை பயன்படுத்தி கிருமி நாசினியை தெளிக்கலாம். கிருமி நாசினியை தெளித்த பின்பு, ஈரமான துடைப்பானை(மாப்) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் வெப்பம் மற்றும் ஐஸ் கிரீம்

சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்கின்றனர். இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன.

வெந்நீர் குடிப்பது மற்றும் வெயிலில் நிற்பது போன்றவை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. மேலும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என யுனிச்செஃப் கூறியதாகச் சொல்லி வெளியாகும் பதிவுகள் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டன.

இதெல்லாம் உண்மையானவை அல்ல என்கிறார் யுனிசெஃப் அமைப்பை சேர்ந்த சார்லட் கோர்னிக்ஸ்.

வெயில் காலத்தில் ஃப்ளூ வைரஸ் உடலின் வெளிப்புறத்தில் நிலைத்திருக்காது ஆனால் இது கொரோனா மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் இவர்.

உடல் வெப்பத்தை அதிகப்படுத்துவது அல்லது வெயிலில் நிற்பது போன்ரவை அவ்வளவு பயனுள்ளதாக தெரியவில்லை என பேராசிரியர் ப்ளூம்ஃபீல்ட் கூறியுள்ளார். வைரஸ் உடலுக்குள் வந்துவிட்டால் உடலின் எதிர்ப்பு சக்தியே அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் அவர்.