Icrcream corona

கொரோனா வைரஸ் வெப்பம் மற்றும் ஐஸ் கிரீம்

சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்கின்றனர். இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன.

வெந்நீர் குடிப்பது மற்றும் வெயிலில் நிற்பது போன்றவை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. மேலும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என யுனிச்செஃப் கூறியதாகச் சொல்லி வெளியாகும் பதிவுகள் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டன.

இதெல்லாம் உண்மையானவை அல்ல என்கிறார் யுனிசெஃப் அமைப்பை சேர்ந்த சார்லட் கோர்னிக்ஸ்.

வெயில் காலத்தில் ஃப்ளூ வைரஸ் உடலின் வெளிப்புறத்தில் நிலைத்திருக்காது ஆனால் இது கொரோனா மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் இவர்.

உடல் வெப்பத்தை அதிகப்படுத்துவது அல்லது வெயிலில் நிற்பது போன்ரவை அவ்வளவு பயனுள்ளதாக தெரியவில்லை என பேராசிரியர் ப்ளூம்ஃபீல்ட் கூறியுள்ளார். வைரஸ் உடலுக்குள் வந்துவிட்டால் உடலின் எதிர்ப்பு சக்தியே அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் அவர்.