பூண்டு
பேஸ்புக்கில் பெரிதும் பகிரப்படுவது, கொரோனாவிலிருந்து தப்பிக்க பூண்டு சாப்பிடுங்கள் என்பது ஆகும். பூண்டு சாப்பிடுவது நல்லது . அதில் நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது. ஆனால் அதை சாப்பிட்டால் புதிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது
இது போன்ற மருந்துகள் ஆபத்தானவை இல்லை. ஆனால் மருத்துவ ரீதியாக இவை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றும் என்பதும் இல்லை.
தி சௌத் சைனா மார்னிங் போஸ்ட், என்ற சீனப் பத்திரிகை ஒரு பெண் 1.5 கிலோ பூண்டை சாப்பிட்டதால் தொண்டை எரிச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதும், தண்ணீர் நன்றாக குடிப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் இந்த குறிப்பிட்ட உணவு இந்த வைரஸிலிருந்து காப்பாற்றும் என்று எதுவும் இல்லை.