டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்

உயரம் தாண்டும் போட்டியின் இறுதிப்போட்டி..

இத்தாலியின் நாட்டின் வீரர்  தாம்பெரி மற்றும் கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் இருவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான கடும் போட்டி நிலவியது ,
 இருவருமே 2.37 மீட்டர்கள் தாண்டுகிறார்கள்..
இருவருக்கும் மீண்டும் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன..
அதிலும் அந்த 2.37 மீட்டருக்கு மேல் இருவரும் தாவ முடியவில்லை..

இறுதியாக தங்கம் யாருக்கு என்று  இருவருக்கும் ஒரே ஒரு   இறுதி வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.. ஆனால் அதில் கால் அடிபட்டு இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று  இத்தாலியின் தாம்பெரி  அறிவிக்கிறார் ..

 இவர் வர இயலாத சூழலில், நடுவார்களால் கத்தார் நாட்டின் பார்ஸிம்க்கு நேரடியாக தங்கம்  அறிவித்ததாக,  அறிவிக்க முடியும்..

ஆனால், கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் – நடுவரிடம், இப்பொழுது இறுதி வாய்ப்பை நானும் வேண்டாம் என்று சொன்னால் தங்கப்பதக்கத்தை இருவருக்கும் பகிர்ந்து  அளிக்க வாய்ப்புள்ளதா  என்று கேட்கிறார்..

அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நடுவர் சொன்ன அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் இறுதி வாய்ப்பு எனக்கு வேண்டாம், இருவருக்கும் தங்கத்தை அளியுங்கள் என்று அறிவிக்கிறார் கத்தார் நாட்டின் பார்ஸிம்..

அவர் அப்படி அறிவித்ததும் இத்தாலி நாட்டின் தாம்பெரியின் மகிழ்ச்சியையும், அவர் குதித்து பார்ஸிம்மை கட்டி அரவணைப்பதையும் பாருங்கள்..

விளையாட்டில் தான் மதம், இனம், மொழி, நிறம் எதுவுமில்லாத பூரணமான மனிதம் தழைக்கிறது..
அதெற்கெல்லாம் உதாரணமாக திகழ்ந்த கத்தார் நாட்டின் பார்ஸிம் ,
கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்  உலக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்..

அந்த முடிவின் படி இருவருக்கும்  தங்க மெடல் கொடுக்க படுகிறது  அதன் காணொளி