“வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!” – தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்
பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் தெரியாத உறுப்பினர்கள் கூட “வேண்டும் வேண்டும்… விசாரணை வேண்டும்” என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் முழக்கமிடும் சுவாரஸ்யம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சி குழுவிலே உள்ளதால், அவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழில் முழக்கம் எழுப்ப கற்பித்துள்ளனர். அதேபோலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் முழக்கம் எழுப்ப கற்றுக் கொண்டுள்ளனர்.
இதுதான் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எதிரொலிக்க காரணம் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.