பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் இருப்பை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:30க்கு துவங்கி மதியம், 1:45 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.