தமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 2,994 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் அஞ்சல் துறையில் 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவெனில், நீங்கள் விரும்பும் இடத்தில் பணி செய்யலாம். எனவே அஞ்சல் துறை மீது ஆர்வம் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமேதான் விண்ணப்பிக்க முடியும். முதலில் https://indiapostgdsonline.gov.in/ எனும் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் Registration எனும் ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். உள்நுழைந்தவுடன் இந்த பேஜில் விண்ணப்பதாரரின் போன் நம்பர், மெயில் ஐடி, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
முக்கியமான விஷயம் நீங்கள் கொடுக்கும் போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி சரியானதுதானா என்பதை தெரிந்துக்கொள்ள validate ஆப்ஷன் கேக்கும். எனவே இந்த ஆப்ஷனை கிளிக் செய்து அதை validate செய்துகொள்ள வேண்டும். மேலும் இறுதியாக ‘கேப்சா’ கொடுத்து அடுத்த பேஜுக்கு செல்லவும். இதில் ஆதார் எண், 10ம் வகுப்பு எந்த மொழியில் படித்தீர்கள், ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC), போட்டோ, கையெழுத்து ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் போட்டோ 50 KB கீழ் இருக்க வேண்டும். கையெழுத்தும் 20 KBக்கு கீழ் இருக்க வேண்டும். அதேபோல ஒருவேளை விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் அதற்கான ஆப்ஷனையும் கிளிக் செய்யவேண்டும். இதற்கடுத்து ஓபன் ஆகும் பேஜில் விண்ணப்பதாரர் கொடுத்த அனைத்து விவரங்களும் ஒருமுறை காட்டும். இது அனைத்தும் சரி எனில் கீழே உள்ள பாக்ஸை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
அடுத்த பேஜில் வீட்டு முகவரி, அஞ்சல் எண், 10ம் வகுப்பில் எடுத்த மொத்த மார்க், பாடவாரியான மார்க் போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் குறிப்பாக எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option-ஐ தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிட வேண்டும். இறுதியாக save and continue கொடுத்து அடுத்த பக்கத்திற்கு போக வேண்டும். இதுதான் முக்கியமான கட்டம். இந்த வேலையின் சிறப்பே எந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். எனவே அதற்கான ஆப்ஷனில் circle தமிழ்நாடு எனவும் Division applying for என்பதில் எந்த பகுதியில் வேலை பார்க்க விருப்பம் இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பதாரர் தேர்வு செய்த பகுதியில் Divisions எனும் ஆப்ஷன் கேட்கும். இதுதான் வேலை செய்ய வேண்டிய ஏரியா. இதில் நீங்கள் குறைந்தது 5 இடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்திற்காக ரூ.100 கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால் SC/ST/PwD பிரிவினருக்கும் பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கும் கட்டணம் கிடையாது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.