மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி பாஜக எம்.பிக்கள் வரை கூறிய பொய்கள், தவறான தகவல்களின் தொகுப்பு !

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் தரப்பில் ஆளும் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்(No-confidence Motion) மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது பிரதமர் மோடி கலந்து கொண்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். ஆனால், அவருடைய உரையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மணிப்பூர் பற்றி எதுவும் பேசவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னரே, மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசத் துவங்கினார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சியினரின் உரையில் பல்வேறு பொய் செய்திகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றது ஒன்றன்பின் வெளிவரத் தொடங்கின. இக்கட்டுரையில் பிரதமர் மோடி தொடங்கி பாஜக அமைச்சர்கள் வரை கூறிய பொய்கள் மற்றும் தவறான தகவல்களின் தொகுப்பை காணலாம்.

1. திமுக அமைச்சர் வடஇந்தியாவே இந்தியா என்கிறார் : ஸ்மிருதி இரானி & மோடி 

இந்தியா என்பது வடஇந்தியா மட்டுமே என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக அமைச்சர் பேசி இருக்கிறார் என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற விவாதத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி பேசி இருக்கிறார். இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=https%3A%2F%2Fmobile.twitter.com%2Fsanmugaraja93&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1689261705355001856&lang=en&origin=https%3A%2F%2Fyouturn.in%2Farticles%2Fparliament-pm-modi-ministers-misinformations.html&sessionId=b9358831e0992229acd37b59aea214b431da45a9&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=550px

Archive link

இதை ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் பேசும் போது ‘திமுக அமைச்சர் ஒருவர் வட இந்தியாதான் இந்தியா என பேசுகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை கருத்து பேசியதாகப் பரவக் கூடிய வீடியோ எடிட் செய்யப்பட்டது. இந்தியா என்கிற பெயருக்கு ஒரு காலத்தில் பெரிய தாக்கம் நமது ஊரில் இருந்தது இல்லை. இந்தியா என்றால் வடக்கே இருக்கும் ஒரு ஊர் என்பது போல் நாம் இருந்தோம். ஆனால், இன்னைக்கு என்ன நிலைமை. எதோ, எங்கோ தூரத்தில் கேட்கப்பட்ட ஊர் இந்தியா என்பதை மாற்றி, இன்றைக்கு இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது என பேசி இருந்தார்.

மேலும் படிக்க : அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை பேசியதாக நாடாளுமன்றம் வரை பொய் பேசும் பாஜகவினர் !

திமுக அமைச்சர் பேசிய வீடியோவில் ஒரு பகுதியை எடிட் செய்து பரப்பி உள்ளனர். இத்தவறான தகவலை பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச, அதை பிரதமரும் பேசி இருக்கிறார்.

2. உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்தினோம்: அமித்ஷா 

ஆகஸ்ட் 9ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ” நாங்கள் நெருக்கடி மற்றும் கொரோனா காலத்தில் உக்ரைன் மற்றும் ஏமன் அரசிடம் கூட பேசினோம். 3 நாட்கள் போரை நிறுத்தி விமானங்களை இயக்கினோம். உக்ரைன் போரின் போது இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே ஏமன் நாட்டில் இருந்தும் மக்கள் கொண்டு வரப்பட்டனர் ” எனப் பேசி இருக்கிறார்.

https://youtube.com/watch?v=Qs83oxVQisY%3Fstart%3D2590

இந்த உக்ரைன் போர் நிறுத்தம் பொய்யானது கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உக்ரைன் போரை 6 மணி நேரம் நிறுத்தி வைத்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார். அதேபோல், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார் என ஜே.பி. நட்டா கூறியதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !

தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்தி வைத்ததாக பொய்யான தகவலை மீண்டும் பேசி இருக்கிறார். அதை நாடாளுமன்றத்திலேயே பேசியும் உள்ளார். இதுகுறித்த கட்டுரைகள் முன்பே வெளியிட்டு இருக்கிறோம்.

3. முதல் முறையாக மிசோரமில் ஐஐஎம்சி-ஐ திறந்தோம் – மோடி 

ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து பேசுகையில், ” முதன்முறையாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்(IIMC) போன்ற நிறுவனம் மிசோரமில் திறக்கப்பட்டு உள்ளது ” எனக் கூறி இருக்கிறார்.

https://youtube.com/watch?v=xdtigfYLrBY%3Fstart%3D28994

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்சால் நகரில் உள்ள ஐஐஎம்சி குறித்து தேடுகையில், வடகிழக்கு பிராந்தியத்தின் ஐஐஎம்சி வளாகம் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் மிசோரம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு தற்காலிக கட்டிடத்தில் இருந்து செயல்பட தொடங்கியது என ஐஐஎம்சி மிசோரம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்போது ஆட்சியில் இருந்தது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

மேலும், 2022ல் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ” ஐஐஎம்சி வடகிழக்கு பிராந்திய வளாகம் 2011ம் ஆண்டு மிசோரம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக கட்டிடத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது. வளாகத்திற்கான கட்டுமான பணிகள் 2015ல் தொடங்கி 2019ல் முடிவடைந்தது. மொத்த செலவு 25 கோடி. மிசோரம் பல்கலைக்கழகம் வழங்கிய 8 ஏக்கர் நிலத்தில் ஐஐஎம்சி நிரந்தர வளாகத்தில் கல்விக் கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவை உள்ளன ” என இடம்பெற்று உள்ளது.

வடகிழக்கு பிராந்தியத்தின் ஐஐஎம்சி-க்கான நிரந்தர கட்டிடம் தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) ஆட்சியான 2015ல் தொடங்கி 2019ல் முடிவடைந்து 2022ல் குடியரசுத் தலைவரால் திறக்கபட்டுள்ளது. ஆனால், ஐஐஎம்சி-க்கான தற்காலிக கட்டிடம் மற்றும் வகுப்புகள் 2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி(UPA) ஆட்சியில் இருந்தே தொடங்கி விட்டது என்பதை அறிய முடிகிறது.

4. ஸ்மிருதி இரானிக்கு பறக்கும் முத்தம் : பாஜக எம்பிக்கள் 

ஆகஸ்ட் 9ம் தேதி நாடாளுமன்ற விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பறக்கும் முத்தம்(Flying Kiss) கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பாஜக எம்பிக்கள் தரப்பில் சபாநாயகருக்கு மனுவும் அளித்தனர்.

Video Player

00:00

00:17

ஆனால், ராகுல் காந்தி சைகை செய்யும் இடத்திற்கு நேராக அமைச்சர் ஸ்மிருதி இரானி அமர்ந்திருக்கவில்லை. ராகுல் காந்திக்கு இடது பக்கம் வேறு திசையில் அவர் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இதிலிருந்து ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை என்பதை விளக்கி கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரை பேச வைக்க கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் இத்தனை பொய்களும், தவறான தகவல்களும் இடம்பெற்று உள்ளன.

Links :

Live : HM Shri Amit Shah speaks on No Confidence Motion in Lok Sabha.

Lok Sabha LIVE: PM Modi In Lok Sabha | No-confidence Motion | Modi Vs Oppn | Manipur

INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION NORTH EAST REGIONAL CAMPUS

President of India inaugurates the Indian Institute of Mass Communication (IIMC) North Eastern Regional Campus at Aizawl

சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !

சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !

FACT CHECK
For More details
https://youturn.in/factcheck/chandraayan-3-moon-video-3d-animation.html

தபால் துறையில் வேலை வாய்ப்பு..

தமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 2,994 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் அஞ்சல் துறையில் 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவெனில், நீங்கள் விரும்பும் இடத்தில் பணி செய்யலாம். எனவே அஞ்சல் துறை மீது ஆர்வம் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமேதான் விண்ணப்பிக்க முடியும். முதலில் https://indiapostgdsonline.gov.in/ எனும் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் Registration எனும் ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். உள்நுழைந்தவுடன் இந்த பேஜில் விண்ணப்பதாரரின் போன் நம்பர், மெயில் ஐடி, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

முக்கியமான விஷயம் நீங்கள் கொடுக்கும் போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி சரியானதுதானா என்பதை தெரிந்துக்கொள்ள validate ஆப்ஷன் கேக்கும். எனவே இந்த ஆப்ஷனை கிளிக் செய்து அதை validate செய்துகொள்ள வேண்டும். மேலும் இறுதியாக ‘கேப்சா’ கொடுத்து அடுத்த பேஜுக்கு செல்லவும். இதில் ஆதார் எண், 10ம் வகுப்பு எந்த மொழியில் படித்தீர்கள், ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC), போட்டோ, கையெழுத்து ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் போட்டோ 50 KB கீழ் இருக்க வேண்டும். கையெழுத்தும் 20 KBக்கு கீழ் இருக்க வேண்டும். அதேபோல ஒருவேளை விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் அதற்கான ஆப்ஷனையும் கிளிக் செய்யவேண்டும். இதற்கடுத்து ஓபன் ஆகும் பேஜில் விண்ணப்பதாரர் கொடுத்த அனைத்து விவரங்களும் ஒருமுறை காட்டும். இது அனைத்தும் சரி எனில் கீழே உள்ள பாக்ஸை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.

அடுத்த பேஜில் வீட்டு முகவரி, அஞ்சல் எண், 10ம் வகுப்பில் எடுத்த மொத்த மார்க், பாடவாரியான மார்க் போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் குறிப்பாக எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option-ஐ தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிட வேண்டும். இறுதியாக save and continue கொடுத்து அடுத்த பக்கத்திற்கு போக வேண்டும். இதுதான் முக்கியமான கட்டம். இந்த வேலையின் சிறப்பே எந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான். எனவே அதற்கான ஆப்ஷனில் circle தமிழ்நாடு எனவும் Division applying for என்பதில் எந்த பகுதியில் வேலை பார்க்க விருப்பம் இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பதாரர் தேர்வு செய்த பகுதியில் Divisions எனும் ஆப்ஷன் கேட்கும். இதுதான் வேலை செய்ய வேண்டிய ஏரியா. இதில் நீங்கள் குறைந்தது 5 இடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்திற்காக ரூ.100 கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால் SC/ST/PwD பிரிவினருக்கும் பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கும் கட்டணம் கிடையாது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தரையிறக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு லேண்டர் வருவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்

உயரம் தாண்டும் போட்டியின் இறுதிப்போட்டி..

இத்தாலியின் நாட்டின் வீரர்  தாம்பெரி மற்றும் கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் இருவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான கடும் போட்டி நிலவியது ,
 இருவருமே 2.37 மீட்டர்கள் தாண்டுகிறார்கள்..
இருவருக்கும் மீண்டும் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன..
அதிலும் அந்த 2.37 மீட்டருக்கு மேல் இருவரும் தாவ முடியவில்லை..

இறுதியாக தங்கம் யாருக்கு என்று  இருவருக்கும் ஒரே ஒரு   இறுதி வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.. ஆனால் அதில் கால் அடிபட்டு இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று  இத்தாலியின் தாம்பெரி  அறிவிக்கிறார் ..

 இவர் வர இயலாத சூழலில், நடுவார்களால் கத்தார் நாட்டின் பார்ஸிம்க்கு நேரடியாக தங்கம்  அறிவித்ததாக,  அறிவிக்க முடியும்..

ஆனால், கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் – நடுவரிடம், இப்பொழுது இறுதி வாய்ப்பை நானும் வேண்டாம் என்று சொன்னால் தங்கப்பதக்கத்தை இருவருக்கும் பகிர்ந்து  அளிக்க வாய்ப்புள்ளதா  என்று கேட்கிறார்..

அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நடுவர் சொன்ன அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் இறுதி வாய்ப்பு எனக்கு வேண்டாம், இருவருக்கும் தங்கத்தை அளியுங்கள் என்று அறிவிக்கிறார் கத்தார் நாட்டின் பார்ஸிம்..

அவர் அப்படி அறிவித்ததும் இத்தாலி நாட்டின் தாம்பெரியின் மகிழ்ச்சியையும், அவர் குதித்து பார்ஸிம்மை கட்டி அரவணைப்பதையும் பாருங்கள்..

விளையாட்டில் தான் மதம், இனம், மொழி, நிறம் எதுவுமில்லாத பூரணமான மனிதம் தழைக்கிறது..
அதெற்கெல்லாம் உதாரணமாக திகழ்ந்த கத்தார் நாட்டின் பார்ஸிம் ,
கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்  உலக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்..

அந்த முடிவின் படி இருவருக்கும்  தங்க மெடல் கொடுக்க படுகிறது  அதன் காணொளி 

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; பீலா ராஜேஷ் இன் கணவர் ராஜேஷ் (சிறப்பு டிஜிபி)யை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 உயர் நீதிமன்றம் உத்தரவு

சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்தனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்ப தாக கூறப்படுகிறது

பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி, 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. விசாகா கமிட்டியின் முதல்கட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்

“வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!” – தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்

பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் தெரியாத உறுப்பினர்கள் கூட “வேண்டும் வேண்டும்… விசாரணை வேண்டும்” என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் முழக்கமிடும் சுவாரஸ்யம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சி குழுவிலே உள்ளதால், அவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழில் முழக்கம் எழுப்ப கற்பித்துள்ளனர். அதேபோலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் முழக்கம் எழுப்ப கற்றுக் கொண்டுள்ளனர்.

இதுதான் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எதிரொலிக்க காரணம் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.



யுஏஇ, ஆகஸ்ட் 5 முதல் , செல்லலாம்

யுஏஇ ஆகஸ்ட் 5 முதல் , செல்லலாம் என ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி வழங்கி உள்ளது .

இந்தியாவில் சிக்கி தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ்  விசா உடையவர்கள் ,  ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு திரும்புவதற்கு ,  அரசாங்க வலைத்தளத்தில் பதிவு செய்து  உரிமம் பெற வேண்டும் 
உரிமம் பெற இந்த லிங்கை பயன்படுத்த வேண்டும் 

https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/registerArrivals

ஒப்புதலுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பயணிகள் விவரங்கள் இங்கே:

1: விண்ணப்பதாரர் தகவலை நிரப்பவும்
விண்ணப்பதாரர் தகவலில் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், எதிர்பார்க்கப்படும் வருகை தேதி, வருகை துறைமுகம் மற்றும் புறப்படும் நாடு, மின்னஞ்சல் போன்ற விவரங்கள் அடங்கும்.

உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு QR குறியீடு அனுப்பப்படும். உள்ளிடப்பட்ட மின்னஞ்சல் சரியானதா என்பதை உறுதிப்படுத்தவும்

, 2: பாஸ்போர்ட் தகவலை நிரப்பவும்
விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் வகை, காலாவதி தேதி, வெளியீட்டு தேதி, எண் மற்றும் வெளியீட்டு நாடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும்

, 3: ஐக்கிய அரபு அமீரகத்தில் முகவரியை நிரப்பவும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் முகவரியை மொபைல் எண்ணுடன் வழங்கவும்

, 4: தடுப்பூசி மற்றும் PCR சோதனை தேதிகளை நிரப்பவும்
ஐசிஏ படிவத்தில் குடியிருப்பாளர்கள் தேர்வு செய்யக்கூடிய எட்டு தடுப்பூசிகளின் பட்டியலை வழங்கியுள்ளது, அவை: ஸ்புட்னிக்வி, ஜான்சன் (ஜான்சன் மற்றும் ஜான்சன்), மாடர்னா, நோவாவாக்ஸ், ஆக்ஸ்போர்டுனி அஸ்ட்ராஜெனேகா, பைசர் பயோஎன்டெக், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் (கொரோனாவாக்).

விண்ணப்பதாரர்கள் தங்களின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது அளவுகளைப் பெற்ற தேதிகளை நிரப்ப வேண்டும் (பொருந்தும் இடங்களில்). பிசிஆர் சோதனை தேதி மற்றும் சோதனை முடிவு தேதிகளையும் குறிப்பிட வேண்டும்.

, 5: ஆவணங்களைப் பதிவேற்றவும்
பாஸ்போர்ட் படம், தனிப்பட்ட படம் மற்றும் பிசிஆர் சோதனை முடிவுகள் பதிவேற்றப்பட வேண்டும். கோவிட் -19 தடுப்பூசி அட்டை விருப்பமானது.

, 6: பிரகடனங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார அதிகாரிகள் சட்டங்களை முழுமையாக கடைபிடிப்பது மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியானவை என்பதை உறுதிப்படுத்தும் இணையதள அறிவிப்பு பொத்தானை கிளிக் செய்யவும்.

, 7: அனுப்பு என்பதை அழுத்தவும்